டெல்லி வெடி குண்டு சம்பவத்திற்கு உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி-அமித்ஷா-அம்பானி’ கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்..? என எம்.பி திருமாவளவன் கூறியுள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது […]

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், வழிகாட்டுதல்களை உருவாக்கும் வகையில், […]

பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உயர்கல்வியை முற்றிலும் வணிகமயம் ஆக்குவதற்கு வழிவகுக்கும் ‘தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவை’த் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதலமைச்சர் அவர்களை வலியுறுத்துகிறோம். நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தனியார் பல்கலைக்கழகங்கள் […]

விசிக இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என அக்கட்சி நிர்வாகி சங்கத்தமிழன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுகவும், காங்கிரசும் இணைந்துள்ளன. இந்த கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. ஆனால் கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான […]

சென்னையில் திருமாவளவன் கார் மோதிய விவகாரத்தில் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பார்கவுன்சில் இணை தலைவர்கள் ஆர்.அருணாசலம், சரவணன் ஆகியோரை கொண்ட சிறப்புக்குழுவை நியமித்து பார்கவுன்சில் உத்தரவு. கடந்த 7-ஆம் தேதி சென்னை உயர் நீதின்றம் அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று திரும்பியபோது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று திருமாவளவன் சென்ற காருக்கு குறுக்கே வந்துள்ளது. […]

திருமாவளவன் முதலில் நாகரிகமான அரசியலுக்கு வர வேண்டும். காவல் துறையில் பணியாற்றி பல ரவுடிகளை கையாண்ட பின் அரசியலுக்கு நான் வந்துள்ளேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; கரூரில் செப்.27-ம் தேதி நடந்த அரசியல் கட்சி நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் வழக்கம் போல் அரசின் மீது தவறு இல்லை. காவல் துறை […]

சென்னை விபத்தில் அண்ணாமலைக்கு தொடர்பு உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சென்னையில் எனது கார் மீது ஸ்கூட்டர் மோதியது குறித்து முந்திக்கொண்டு அண்ணாமலை விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது. ஸ்கூட்டர் மீது எனது வண்டி மோதியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கும் அண்ணாமலைக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. அண்ணாமலைக்கு மட்டும் உடனடியாக செய்தி எப்படி தெரிகிறது.. […]

விசிக தலைவர் திருமாவளவன் இன்று பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது விஜய்யின் தவெக விசிகவின் வாக்குகளை பிரிக்கப் போகிறது என்ற கருத்து குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.. அதற்கு பதிலளித்த திருமாவளவன் “ இது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி.. இப்படி சொல்வதன் மூலம் விசிக உணர்ச்சி வயப்படும், திருமாவளவன் உணர்ச்சி வயப்படுவார்.. வார்த்தைகளை விட்டுவிடுவார் என்றெல்லாம் அவர்கள் எதிர்பார்க்கிறார்.. விஜய் ஒரு சினிமா நடிகர்.. அவருக்கென ஒரு ரசிகர் […]