ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், 6, 7 தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு […]

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைக்கிறார். வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில், தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு இந்த ஆலைக்கு அடிக்கல் […]

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி செலவில், சர்வதேச தரத்துக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1,350 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளம் தற்போது 3,115 மீட்டர் நீளமுள்ள ஓடுதளமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். ஜூலை 26-ஆம் தேதி தூத்துக்குடி வருகை தரும் நமது பிரதமர் […]

திருச்செந்தூர் குடமுழக்கு விழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்து ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருகை தருவார்கள். மேலும் வெளிமாநிலம் […]

தூத்துக்குடி மாவட்டத்தில், மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடு கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவா (34) என்பவர் கடந்த 2014 ஆம் தனது மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிவாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது, […]

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தூத்துக்குடி மாவட்டத்தில் சாகர் மித்ரா காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் சாகர் மித்ரா பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். கல்வி தகுதி: சாகர் மித்ரா பதவிகளுக்கு விண்ணப்பிக்க […]

கள் மீதான தடையை நீக்க கோரி போராட்டத்தை அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தடைகளை மீறி பனைமரம் ஏறினார். நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு கள் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் தமிழ்நாட்டில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. மதுபானங்களை தமிழ்நாடு அரசே டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் நிலையில் பனை மரத்தில் உற்பத்தியாகும் […]

தூத்துக்குடியில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற இன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் […]