குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக […]
tn government
சென்னை எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்கள் உதவியுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்வு செய்ய மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இதற்கு முதுகலை பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலா்ம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: சென்னை எழும்பூரில் இயங்கி வரும் பழமைமிகுந்த தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரசுத் துறை ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு […]
கடும் பணி நெருக்கடி காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று முதல் புறக்கணிக்க போவதாக வருவாய்த் துறை சங்கங்கள் அறிவிப்பு. இதுதொடர்பாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெரா) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தற்போது நடந்து வருகின்றன. இதில், உரிய திட்டமிடல் இல்லாமல், போதிய பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர […]
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் […]
சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பு நவம்பர் 30 வரை நீட்டிப்பு செய்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது, விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழு வீச்சில் சாகுபடி செய்து வருகின்றனர். இதுவரை 26.25 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நாள் வரை, 6.27 லட்சம் விவசாயிகளால் 15 இலட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த […]
வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கு டிசம்பர் 17-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும் என்று பாமக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்; நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தை தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் […]
தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு சென்ற ரூ.1720 கோடி முதலீடு.. தமிழ்நாட்டுக்கு ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து விட்டோம்; அதன் மூலம் 34 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து விட்டது என்றெல்லாம் திமுக கூறி வந்தது பொய் என்பது அம்பலமாகியுள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் ரூ.1720 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் […]
ஏழாம் ஊதியக் குழு நிலுவைத் தொகை, பதவி உயர்வு உள்ளிட்ட அண்ணாமலை பல்கலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏழாம் ஊதியக்குழு பரிந்துரைகளின்படியான நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், முனைவர் பட்ட ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும், பதவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை […]
பொறியியல் மாணவர்கள் ஆன்லைனில் நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி படிக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் (ஏ.சி.டெக்) செயல்படும் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி தொடர்பான குறுகிய கால படிப்பு நவம்பர் 26 முதல் டிசம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. […]
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் முனைப்புடன் செயல்பட்டு மேகதாது அணை கட்டும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக, தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீட்டில் பிரச்னை நீடித்து வருகிறது. மழைக்காலங்களில் உபரியாக வரும் நீரை மட்டும் காவிரியில் திறந்துவிட்டு, தமிழகத்திற்கான பங்கீட்டை அளவுக்கு […]

