திருவாரூரில் ரூ.50 கோடி முதலீட்டில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு‌. முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், SCM Garments பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்) ஆடை உற்பத்தி […]

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தவர்கள் எல்லாம் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கின்றார்கள் என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை: “தமிழகத்தில் வேளாண்மைத் துறை அதிகாரிகளை, விவசாய பணிகளை தவிர அனைத்து வேலைகளையும் பார்க்க வைக்கின்றனர். ஆட்சியாளர்கள் விவசாயத்தை முன்னுரிமை படுத்துவதில்லை. தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவையில் வரும் நவம்பர் 19-ம் தேதி மாநாடு நடைபெறுகிறது. இதில், பங்கேற்க பிரதமர் மோடி வரும் […]

திமுக அரசின் சாதனைகளை தொகுதி முழுவதும் விளம்பரப்படுத்த வேண்டும் என்று ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி, திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளை நேரடியாக (ஒன் டு ஒன்) சந்திக்கும் ‘உடன்பிறப்பே வா’ என்ற சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இதுவரை 81 தொகுதிகளின் நிர்வாகிகளை ஸ்டாலின் […]

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ஆண்டு தோறும் 1000 மாணவர்களுக்கு, முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500-ம் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு […]

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நிதியமைச்சராக அல்ல, கட்சி தொண்டராக பணியாற்றுவேன்” என கட்சி நிர்வாகிகள் மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்; தமிழகம் முழுவதும் 4 லட்சம் பொறுப்பாளர்கள் உள்ளனர். மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் வந்துள்ளது என்பதை ஒவ்வொரு அணியும் சொல்லும் அளவிற்கு 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தந்துள்ளார். 2024-ம் […]

2026-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களும் 2026-ம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் மூடப்பட வேண்டும். இதுதவிர, தமிழகத்தில் பொது விடுமுறை நாட்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் ஆண்டில் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், தைப்பூசம், ரம்ஜான், புனித வெள்ளி, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கியப் பண்டிகைகள் உட்பட மொத்தம் 24 நாட்களுக்கு […]

உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025- 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் […]

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின இனத்தைச்‌ சார்ந்த விவசாயிகளின்‌ கால்நடைகளுக்குத்‌ தேவைப்படும்‌ தீவனப்புல்‌ வளர்க்க ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மதிப்பீட்டில்‌ விதைத்‌ தொகுப்பு மற்றும்‌ புல்கடணைகள்‌ கால்நடை அறிவியல்‌ பல்கலைக்கழகம்‌ ஆவின்‌ நிறுவனம்‌ மூலம்‌ ரூ.1.00 கோடி மதிப்பில்‌ வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின விவசாயிகளின்‌ பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்‌ வகையில்‌ கால்நடைகளுக்கு தேவைப்படும்‌ தீவனப்புல்‌ வளர்க்க விதை தொகுப்பு மற்றும்‌ புல்கறணைகள்‌ பெறும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ விண்ணப்பதாரர்‌ […]

கோவில்பட்டியில் 30 சதவீத வாக்காளரை காணவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம் சுட்டியுள்ளார். கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு; தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு என்பது திமுகவுக்கு கை வந்த கலை. தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு புகார் சென்றதால், எஸ்ஐஆர் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இது ஒன்றும் புதிது அல்ல. இதற்காக ஏன் திமுக […]

தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம். விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு. ஒருங்கிணைந்த கட்டிட வளர்ச்சி விதிகளில் திருத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம் பெட்ரோல் – டீசல் விலை அதிகமாக இருக்கிறது. அதேபோல, சுற்றுச் சுழலுக்கி மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகம் […]