fbpx

அரிதினும் அரிதான வழக்கு என கருதி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 70 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக …

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களின் படைப்புகளை சந்தைப்படுத்திடவும், காட்சிப்படுத்திடவும், ஓவிய சிற்பக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை நமது நாட்டின் பாரம்பரிய கலைகளையும், பண்பாட்டையும், கலைப் பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் …

தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க நடப்பு 2024-2025ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிர்காப்பீட்டிற்கான காலவரம்பு 30.11.2024 வரை நீட்டிப்பு. இத்திட்டத்தில் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் மட்டும் காப்பீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை …

முன்னாள் படைவீரர்கள் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ கடை இருப்பின் சம்மந்தப்பட்ட வட்டார அலுவலகத்தை அணுகி ரூ.1000 முன்பணம் செலுத்தி FRO முகவர் உரிமம் பெற்று ஆவின் பாலகம் நடத்தலாம்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; முன்னாள் படைவீரர்களை “ஆவின் பாலக முகவர்களாக” நியமித்திட பொது மேலாளர் (விற்பனை), பொறுப்பு, தமிழ்நாடு …

தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தற்போது 60 நாட்களுக்கு முன்பு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு தமிழக அரசு …

மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும்போது பில்லர் பெட்டிகள் பழுதடைவதை தடுக்கும் வகையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் பில்லர் பெட்டிகள் தரை மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்த அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மின்துறை அமைச்சர் …

ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவ பட்டயப்படிப்புப் பள்ளிகளில் (சென்னை மற்றும் பாளையங்கோட்டை) உள்ள ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்புகளுக்கான காலி இடங்கள் அனைத்திற்கும். 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து …

தமிழக அரசின் அறிவியல் நகரம் ஆண்டுதோறும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான விருதுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளி மாணவர்களின் அறிவை வடிவமைப்பதிலும், அவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதிலும், உயர்கல்வியில் மாணவர்கள் அறிவியல் …

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் பேராசிரியர்களுக்கு அடுத்தாண்டு மே31 வரை மறுநியமனம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசு / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓர் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு …

மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் ‘நீர் பிளஸ்’ தரச்சான்று பெற சென்னை மாநகராட்சி விண்ணப்பித்துள்ளது. இதற்காக மாநகர கழிவுநீர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் அனைத்து …