சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 – 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான […]

தொலைதூரக் கல்வி மூலம் கால்நடை பராமரிப்பு, கோழி வளர்ப்பு மற்றும் இவை சார்ந்த துறைகளில் தேவைப்படும் திறன்மிக்க மனித சக்தியை உருவாக்க தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம், தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் மூலம் தொழிற்பயிற்சி அளிப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டு காலத்திற்கு அமலில் இருக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி […]

விவசாய மின் இணைப்பு திட்டங்களை பொருத்தவரை சாதாரண பிரிவில் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 23.09.2021 அன்று அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு 1,00,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்கள். […]

உங்களுடன் ஸ்டாலின்’ ஊரை ஏமாற்றும் திட்டம் என்பது உறுதியானது என பாமக தலைவர் அன்புமணி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் அரசை நம்பி அளித்த கோரிக்கை மனுக்களுக்கு திமுக அரசு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறது என்பதற்கு […]

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், அயலக தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் அவர் இன்று காலை புறப்படுகிறார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் செல்கிறார். துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் செல்கின்றனர். இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு […]

தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அரசு சிறப்பு செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத் துறையில் பணியாற்றிய சதிஷ் சந்திரா சவான், அரசு செயலாளர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைக்கு […]

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு வேளாண்மையில், பயிர் உற்பத்தியை அதிகரிக்க, நிலத்தடி நீர் பாசனத்தில் மின்மோட்டார் பம்புசெட்டு அமைக்கும் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல் ஆகிய நோக்கத்திற்காக செயல்படுத்தி வருகிறது. நடப்பு 2025-26 ஆம் ஆண்டில் […]

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று எஸ்எம்சி குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய உறுப்பினர்களை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் […]

சுபமுகூர்த்த தினமான இன்று ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. இது குறித்து தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் […]