நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றான புதிய மசோதாவை செயல்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MGNREGA) ரத்து செய்து, அதற்கு பதிலாக, ‘விபி-ஜி ராம் ஜி’ மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ததற்கு தமிழக அரசின் ஆழ்ந்த கவலை மற்றும் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் […]

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய விவரத்தை சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொருளாதார தடை இன்றி மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு மாதந்தோறும் உதவி தொகைகளையும் தமிழரசு வழங்கி வருகிறது. புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் மாதந்தோறும் தகுதி உள்ள மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் பொருளாதார தடை இன்றி கல்வியை தொடர் முடிகிறது.‌ அந்த நிலையில் மற்றொரு திட்டத்தை […]

சென்னையில் செயல்படும் அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் சேர மாணவர்கள் டிசம்பர் 22 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தமிழக மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கும் வகையில் தமிழக அரசின் பயிற்சி மையங்கள் சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராயா கல்லூரியிலும், சேப்பாக்கம் மாநிலக் கல்லூரியிலும் […]

4,000 கோடி ரூபாய் செலவாகும் என்பதால், ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இது குறித்து பெண் ஒருவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் முக்கியமானது. சானிட்டரி நேப்கின்களின் அதிக விலை காரணமாக ஏழை பெண்களும், நாப்கின்கள் கிடைக்காத காரணத்தால் கிராமப்புற பெண்களும், ஆரோக்கியக் குறைவான மாற்று […]

பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் […]