பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்; பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. அதன்படி, பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். சுவாசப் பிரச்சினை உடையவர்கள் பொதுவெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பட்டாசு […]

தீபாவளியன்று வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்களின் ஊழியர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், கேரளா – கர்நாடகா கடலோரப் […]

அனைத்து நியாய விலைக் கடைகளிலும் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் வடகிழக்கு பருவமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 2025 நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை அனைத்து நியாயவிலைக் கடைகளின் மூலம் விநியோகிக்கப்பட்டு […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்களை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் போக்குவரத்து ஆணையர் தலைமையில் காவல் துறை இணை மற்றும் ஆணையர்கள், சிஎம்டிஏ பொது மேலாளர், எம்டிசி துணை மேலாளர், […]

தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி: விருகம்பாக்கம் தொகுதி 136-வது வார்டில் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டப்பட்டது. அது சேதமடைந்ததால் தற்போது இடிக்கப்பட்டுவிட்டது. அந்த இடம் அரசு புறம்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது. சிஎம்டிஏவில் குடியிருப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2013-ல் […]

தொழிலாளர் நல நிதி பங்கு தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்து, அரசு இணையதளத்தில் பதிவு செய்து ரசீது பெற, நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச்சட்டம் 1972 மற்றும் விதிகள் 1973, சட்டப்பிரிவு 2(டி)-ன் கீழ் வரும் தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், உணவு […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் 19-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் 19-ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை முடிந்து […]

வடகிழக்குப் பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபரிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது […]

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் குறித்து உறுதியளிக்கவில்லை என ஃபாக்ஸ்கான் மறுப்பு தெரிவித்துள்ளது. அரை நாளில் திமுக அரசின் புளுகு அம்பலமானது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளைச் செய்ய தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்திருப்பதாகவும், அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தமிழக அரசு பெருமை பேசிக் கொண்டிருந்த நிலையில், […]