fbpx

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதி்ப்பில் 2022-23-ல் நடப்பு விலையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திட்டம், வளர்ச்சித்துறை செயலர் வெளியிட்ட செய்தி குறிப்பில் ; தமிழகத்தின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பு மற்றும் நிலையான விலையில் 2022-23-ம் ஆண்டுக்கான விரைவு மதிப்பீடு மற்றும் 2023-24-ம் …

குருப்-1 தேர்வில் சில தேர்வர்கள், தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாமல் இருப்பதும், சிலவற்றை முழுமையாக பதிவேற்றம் செய்யாமல் விட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; குருப்-1 தேர்வில் சில …

மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் …

இந்த முறை தீபாவளிக்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. தீபாவளிக்காக பொதுமக்கள் பலரும் ஷாப்பிங்கில் இறங்கியுள்ளனர். நகரப் பகுதிகளில் தீபாவளி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

சென்னை, கோவை, …

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்..

பொறியியல் பட்டதாரி பயிற்சி

காலியிடங்களின் எண்ணிக்கை: 201

Mechanical Engineering, Automobile Engineering – 170

Civil Engineering – 10

Computer Science and Engineering, Information …

தீபாவளியை கொண்டாட, குறைந்த ஒலி மற்றும் குறைந்த காற்று மாசை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும்.

இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. பொதுவாக தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது வழக்கம்.. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. …

பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தீவன அபிவிருத்தித் திட்டம் மூலம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்கவும், கால்நடை வளர்ப்போரிடையே பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க செய்யவும் ஒவ்வொரு ஆண்டும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை கால்நடை பராமரிப்பு துறை செயல்படுத்தி வருகிறது. நடப்பாண்டில் தீவன அபிவிருத்தி திட்டம் 2024-25ன் கீழ் கால்நடை வளர்ப்போர் …

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலை கற்றுத் தர வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநரை, தரங்கெட்ட முறையில் கண்ணிய குறைவாக விமர்சித்ததற்கு பகிரங்க …

விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; நம் முதலமைச்சர் கடந்த 3 வருடங்களில் மட்டும், 3 ஆயிரத்து 350 விளையாட்டு வீரர்களுக்கு, …

கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்குவதுடன், பத்தாண்டுகளை நிறைவு செய்த தற்காலிக தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக பணி நிலைப்பு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளுக்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் …