தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகளை அடைப்பது வழக்கம். அதன்படி, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள். அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “வருகிற 02-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான […]

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் மின்வாரிய கழகங்களுக்கிடையிலான உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றத்து. இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் பருவ மழைக்கால முன்னேற்பாடுகள், பணியாளர் தேவை மற்றும் மனிதவள செயல்முறைகள், சட்ட விவகாரங்கள், நுகர்வோர் சேவை மற்றும் குறைதீர் வழிமுறைகள், அறிவிப்புகள், திட்டங்கள் […]

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனராக அண்ணாதுரை, பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டு ஆணையராக ஜான் லுாயிஸ், சென்னை மாநகராட்சி (கல்வி) இணை ஆணையராக கற்பகம் நியமனம். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில்: ஆவின் நிர்வாக இயக்குநர் மற்றும் […]

மீன்தொழில்கள் மேலாண்மை தொடர்பான எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மீன்வள வணிக கல்லூரியில் எம்பிஏ (மீன்தொழில்கள் மேலாண்மை) படிப்பு வழங்கப்படுகிறது. நடப்பு 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 20 […]

கரூர் சம்பவம் திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது என கூறி, சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்’ என மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. தவெக தலைவர் விஜய் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் […]

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்துள்ளது. இந்தக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களைப் பூர்த்தி செய்யப்பட்டவுள்ளன. ஏற்கெனவே, விண்ணப்ப பதிவு மேற்கொள்ள […]

தமிழகம் முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தெகுதி-1 மற்றும் IIA)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR) தேர்வு 28.09.2025 அன்று முற்பகல் நடைபெற உள்ளது. இத்தேர்வினை 5,53,634 (பொதுத் தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 4,47,421 மற்றும் பொது ஆங்கிலத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் […]

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பரில் காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 10-ம் தேதி […]