அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் தொழிற்சாலைகள், பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்: அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கை, தமிழகத்தின், குறிப்பாக பின்னலாடை மையமான திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் பாதிப்படைந்துள்ளது. […]

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10 முதல் 26-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.10-ல் தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறும். மேலும், 6 முதல் […]

பள்ளிக் குழந்தைகளுக்கான ஆதார், ‘பயோ மெட்ரிக்’ அடையாளத்தை புதுப்பிக்க முகாம்களை கட்டாயமாக நடத்தும்படி மாநில அரசுகளுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு என பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், 5 -15 வயது வரையிலான பள்ளி குழந்தைகளின் கைரேகை, மற்றும் கண் கருவிழிப் படலம் பதிவு செய்து புதுப்பிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக 1-ஆம் வகுப்பு முதல் […]

சுபமுகூர்த்த தினமான இன்று மற்றும் நாளை ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. இது குறித்து தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் […]

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-22ல் தேவராஜன் தெருவில் உள்ள சமுதாயக் கூடம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-29ல் இராமலிங்க காலனி சி பிளாக் பிரதான சாலை, வாழைத்தோப்பு அருகிலுள்ள நியாய விலைக்கடை, இராயபுரம் […]

2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்தன் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தர துறையின் மூலம் 6 வகையான சுய வேலை வாய்ப்புத் திட்டங்கள் முதலீட்டு மானியம் உள்ளிட்ட 10 வகையான மானியத் திட்டங்கள், உலக முதலீட்டார் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து மாவட்டம் வாரியாக அமைச்சர் அவர்கள் […]

துணைத் தேர்வை எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி 10-ம் வகுப்பு மாணவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. துணைத் தேர்வை எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மறுகூட்டல் அல்லது மறுப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் […]

பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாள் விழா பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்: தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் அறிவிப்பிற்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா. தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டிகள் முறையே 01.09.2025 & 02.09.2025 ஆகிய நாள்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு […]

தமிழக அரசின் இலக்கியத் திறனறி தேர்வுக்கு செப்டம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து விதமான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 […]