காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாக கொண்டு செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்களில் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 377 காலிப்பணியிடங்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் […]

தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயனம் சென்று திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5000/- வரை நேரடியாக மானியம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டைச் சேரந்த 150 பௌத்தநபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-2026 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயனம் சென்று […]

தமிழகம் முழுவதும் இன்று 12,525 கிராமங்களில் உள்ள ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், […]

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: 10-ம் வகுப்பு துணை தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. அத்தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் விடைத்தாள் நகலை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அப்போது, தங்கள் […]

அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம் செய்வது தொடர்பாக வழிகாட்டுதல்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2025-26) கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில் உள்ள மாணவர் […]

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; விவசாயிகள் நீர்ப் பாசனத்திற்கான மின்சாரத் தேவையினை பெறுவதற்கு. முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்கீழ் மின் கட்டமைப்புடன் சாராத. தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் ஒன்றிய அரசின் வரையறுக்கப்பட்ட விலையில் அரசு மானியத்தில், வேளாண்மைப் […]

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த கல்வி ஆண்டிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா […]