வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் வரும் 20-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அதில் பெருந்திரளாக பங்கேற்குமாறும் தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்; தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கமான வன்னிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வரலாற்றில் சமூக அநீதி அரசான திமுக அரசு, இன்னும் இரு மைல்கல்களை கடந்திருக்கிறது. முதலாவதாக, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு […]

வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த அறிவுரை வெளியிடப்படுகிறது. வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய அரசின் https://emigrate.gov.in இணையதளத்தில் பதிவு […]

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்து விதி மீறலில் ஈடுபட்ட 451 […]

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் மனு கொடுக்கப்பட்ட 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என வருவாய் துறை செயலர் தெரிவித்துள்ளார் . இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் துறை செயலர் அமுதா; தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் நகர்ப்புறத்தில் 13 துறைகள் மூலமாக 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகள் மூலமாக 46 சேவைகளும் வழங்கப்படும். இந்த முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் […]

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் மொழி திறன் தேர்ச்சியில் இருந்து மின் வாரியம் விலக்கு அளித்துள்ளது. மின்வாரியத்தில் தற்போது பணியில் உள்ள காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ் மொழி தேர்வு சான்றிதழ் இல்லாமல் பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மின்பகிர்மான வட்டங்களில் பணியாற்றும் மாற்றுத்திறன் பணியாளர்களின் தகவல்களை சேகரித்து அனுப்புமாறு அனைத்து முதன்மை பொறியாளர்கள் மற்றும் […]

கோயில்களுக்கு வரக்கூடிய நிதி ஆதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசை பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு நிதியில் கல்லூரிகள் கட்டாமல், கோயில் நிதியில் ஏன் கட்டுகிறீர்கள்? என்று நியாயமான ஒரு கேள்வியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேட்டிருந்தார். பழனிசாமி, கோயில் நிதியை கல்விக்காக செலவழிக்கக் கூடாது என்கிறார். கல்விக்கு எதிராக […]

மங்களகரமான தினமான இன்று மற்றும் 16-ம் தேதி பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோடக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்று பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். தற்போது ஆனி மாதத்தில் வரும் மங்களகரமான நாட்களான ஜூலை 14 மற்றும் 16 -ம் தேதிகளில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் […]

ஓராண்டுக்கு மேலாகியும்  பி.எட். பட்டச்சான்றிதழ் வழங்கப்படவில்லை. 60 ஆயிரம் பட்டதாரிகளின் எதிர்காலத்துடன் திமுக அரசு விளையாடுவதா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் உள்ள 642 அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு இளநிலை கல்வியியல் ( பி.எட்)  பட்டம் பெற்ற  60 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோருக்கு  ஓராண்டுக்கு மேலாகியும்  தற்காலிகப் பட்டச்சான்றிழும், ஒருங்கிணைந்த மதிப்பெண் […]