தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 09.06.2025 முதல் 11.06.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில், […]

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆட்சியரை தலைவராகக் கொண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தருமபுரி மாவட்ட மீன்வளர்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் […]

கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, “பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்தால் பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தி மாணவர்களை பேருந்தின் உள்ளே வரவழைத்த பின் பேருந்தை இயக்க வேண்டும்” என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. முதல் […]

முதல்வரின் காலை உணவு திட்டத்தில் திங்கள்தோறும் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் – சாம்பார் வழங்கப்படும் என்ற சட்டமன்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நல துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு சமூகநல துறை ஆணையர் ஆர்.லில்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; முதல்வரின் காலை உணவு திட்டத்தின்கீழ் திங்கள்கிழமை வழங்கப்படும் உணவு வகைகளில், காய்கறி […]

கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு முதல் நாளான இன்றே பாட புத்தகம் வழங்கப்பட உள்ளன. கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. முதல் நாளில் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி […]

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்களுக்கு உதவும் வகையில் நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இலவசமாக பல்வேறு துறைகளில் நிபுணர்கள் கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அந்த வகையில் பெண்களுக்கு உதவிடும் அழகுக்கலைப் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அழகுக்கலை என்பது வளர்ந்து வரும் முக்கிய தொழிலாக உள்ளது. சிறிய அளவு முதல் பெரிய […]

தமிழகத்தில் பள்ளிகள் திறந்தவுடன், முதல் ஐந்து நாட்களுக்கு பாடப் புத்தகங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் ஆண்டு விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2 ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுவதை மனதார வரவேற்கிறேன். சீருடை, புத்தகப்பை, லஞ்ச் பாக்ஸ் உணவு, வீட்டுப்பாடம், […]

தருமபுரி மாவட்டத்தில் இன்று பட்டா மாறுதல் செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒருவரின் பெயருக்கு சொத்து பதிவு செய்யப்படும் போது வருவாய் துறை மூலமாக, பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள், ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ் நிலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து ஆன்லைன் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்யலாம். https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற […]

தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு 2.74 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 7ம் தேதி தொடங்கிய நிலையில், 25 நாட்களில் விண்ணப்பிக்கும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஜூன் 6-ம் தேதி வரை www.tneaonline.org-ல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் […]

நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜயின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த காலங்களில் தமிழ்நாடு மாணவர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்த நிலையை மாற்றி, தற்போது அனைத்து தடைகளையும் உடைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் தேர்வு பெறுகிறார்கள். தரவரிசை பட்டியலில் […]