சென்னையில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி அதிகாரிகளுடன் நேற்று (18.09.2026) ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் ஆலோசனை நடத்தி, பருவமழையை எதிர்கொள்ள தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். சென்னையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மாநகராட்சி பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என […]

