TNPSC – Group II & IIA முதல்நிலை போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி […]

சார்- பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உட்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. குரூப்-2 ஏ தேர்வுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், […]

645 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 2, 2ஏ பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயமான டிஎன்பிஎஸ்சி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ சார்பதிவாளர்‌, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்‌, வனவர்‌, முதுநிலை வருவாய்‌ ஆய்வாளர்‌, மற்றும்‌ உதவியாளர்‌ உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குரூப் 2, 2ஏ பணிகளுக்கான அறிவிப்பு இன்று (15.07.2025) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள்‌ 15.07.2025 முதல்‌ 13.08.2025 வரை […]

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடக்க உள்ள நிலையில், தேர்வர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை தேர்வாணையம் வழங்கியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதவுள்ளனர். இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும். மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு […]

வேலைவாய்ப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்து மக்களை ஏமாற்ற டி.என்.பி.எஸ்.சி துணை போகக்கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த ஓராண்டில் மட்டும் 17 ஆயிரம் பேருக்கும் கூடுதலானோருக்கு புதிதாக அரசு வேலைவாய்ப்பு வழங்கப் பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே புதிய […]

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பணியை எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக, டி.என்.பி.எஸ்.சி. மூலம் 17 ஆயிரத்து 595 காலிப்பணியிடங்கள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. இந்த நிலையில் ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 […]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணைய தளத்திற்குச் (tnpsc.gov.in) சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பிரிவில் 3935 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்காக, கடந்த ஏப்ரல் 25-ம் தேதி முதல் […]

நேற்று நடந்த குரூப்-1 தேர்வில் திமுக குறித்த கேள்வி சர்ச்சையாகியுள்ளது. எதிர்கட்சிகல் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பி வருகிறது. ஆண்டுதோறும் அட்டவணை வெளியிட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நியமிக்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பினை எதிர்பார்த்து படித்து தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் 72 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி […]

தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த குரூப்-1, குரூப்-1 ஏ முதல்நிலைத்தேர்வு இன்று (ஜூன் 15) நடைபெறுகிறது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 70 காலியிடங்களையும், உதவி வனப்பாதுகாவலர் பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-1, குரூப்-1 ஏ முதல்நிலைத்தேர்வு இன்று (ஜூன் 15) நடைபெறுகிறது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 44 தேர்வு மையங்களில் 2,49,296 பேர் எழுதுகின்றனர். தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என […]

மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 1,910 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி தேர்வு நடத்தப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (எலெக்ட்ரிக்கல்) உள்பட 58 விதமான பதவிகளில் 1,910 காலி்யிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு (ஐடிஐ மற்றம் டிப்ளமா கல்வித் தகுதி உடைய பதவிகள்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஜூலை 12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்‌ […]