fbpx

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு சூடு நடத்த உத்தரவிட்ட வருவாய்த் துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கண்டனங்கள் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த செப்டம்பர் 6 அன்று வட்டாட்சியராக பதவி …

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தூத்துக்குடி குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் திருக்கோவிலில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? எப்படி விண்ணப்பிப்பது? போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

மெடிக்கல் ஆஃபிசர் – 02 பணியிடங்கள்

ஸ்டாப் நர்ஸ் – 02

பல்நோக்கு சுகாதார பணியாளர் – 02 என …

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி 1 லட்சம் 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் …

தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரே ஒரு மனிதரான முதியவர் கந்தசாமி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி ஊராட்சியில் உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது இந்த கிராமம். கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை …

தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.

அண்மையில் பெய்த அதீத கனமழை தூத்துக்குடியையும் நெல்லையையும் புரட்டிப்போட்ட நிலையில், நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று மீண்டும் தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட …

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் அபராமின்றி மின்கட்டணத்தை செலுத்த கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜனவரி 2 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கனமழையின் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி …

தூத்துக்குடி அருகே நறுமணப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களை தயாரிக்க பயன்படும் திமிங்கல எச்சமான தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீசை தூத்துக்குடியில் ஒரு கும்பல் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் 18 கிலோ எடை கொண்ட …

தூத்துக்குடியை அடுத்துள்ள சங்கரபேரி பகுதியைச் சார்ந்தவர் பிரபல ரவுடி கருப்பசாமி. இவர் மீது மூன்று கொலை வழக்குகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன.

இந்நிலையில் நேற்று இரவு தனது குடும்பத்தாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ரவுடி கருப்பசாமியை 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரது வீட்டிற்குள் புகுந்து சுற்றி வளைத்து சராமாறியாக வெட்டியது. …

ஞாயிற்றுக்கிழமையான நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்பனைக்கு தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் பகுதியில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான நாளை தேவர் ஜெயந்தி மற்றும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மது விற்பனைக்கு …