வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் கொடிய தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று அறிவித்தார். டொனால்ட் ட்ரம்ப், நைஜீரியாவில் கிறிஸ்தவ சமூகத்துக்கு “உயிர்வாழ்தலுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது” என கடந்த அக்டோபர் இறுதி முதல் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். நைஜீரியாவில் கிறிஸ்தவர்களை குறிவைத்து நடைபெறும் வன்முறைகளை அந்த நாட்டின் அரசு தடுக்க தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இதனால், மேற்கு […]

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களைப் படிக்க அனுமதிப்பது நாட்டின் கல்வி முறைக்கும் பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும் என்றும், அதைக் கட்டுப்படுத்துவது தீங்கு விளைவிக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். இதுகுறித்து ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்வதில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு முக்கியமானது. சர்வதேச மாணவர் சேர்க்கையைக் குறைப்பது பரவலான கல்லூரி மூடல்களுக்கும், பொருளாதார இழப்புக்கும் வழிவகுக்கும். […]

“மோடி எனது நண்பர், அவர் ஒரு சிறந்த மனிதர்; நான் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வரலாம்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை உறுதிப்படுத்தியுள்ளார். வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு இடையே, டொனால்ட் டிரம்ப் மீண்டும் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர் என்று அழைத்தார். இந்தியாவிற்கு ஒரு சாத்தியமான வருகை […]

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டால், கடுமையான வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நான் பிரதமர் மோடியுடன் பேசினேன். இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்காது என்று அவர் கூறினார். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் அதிக வரிகளை செலுத்த வேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதியளிப்பதாக […]

ரஷ்யாவுடன் உக்ரைன் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை என்றால், “புடின் உங்களை அழித்துவிடுவார்” என்று டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யா-உக்ரைன் தொடர்பாக வெள்ளை மாளிகையில் டிரம்பும் ஜெலென்ஸ்கியும் சந்தித்தனர். அப்போது பேசிய டிரம்ப், ரஷ்ய நிபந்தனைகளை ஏற்குமாறு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பைனான்சியல் டைம்ஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, சந்திப்பு சில நேரங்களில் “சத்தமாகவும் ஆக்ரோஷமாகவும்” இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. சந்திப்பின் […]

இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகத்தில் பெரியளவில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி வந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். டிரம்பின் இந்த அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன. 2021-25-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் […]

ஈரானுடனான பதற்றங்களுக்கு மத்தியில், எந்தவொரு நாட்டிலும் எளிதாக ஆட்சி கவிழ்ப்பை அமெரிக்காவால் எளிதாக செய்ய முடியும் என்று அதிபர் டிரம்ப் சூசகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா நேரடி தாக்குதலில் களமிறங்கியது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் மூலம் ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்களை தகர்த்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இனியும் ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் இன்னும் தீவிரமடையும் என டிரம்ப் மிரட்டி உள்ளார். இந்த […]