உணவகங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் மூலம் காய்ச்சல் பாதிப்பு மற்றும் நோய் தொற்று பரவல் ஏற்படுவதாக புகார் எழுந்து உள்ள நிலையில் ஹோட்டலில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌ தமிழகத்தில் உள்ள ஹோட்டல்களில் சமையல் அரங்கு, உணவு சேமிப்பு கிடங்கு, கை கழுவும் இடம், கழிவறை உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த சில நாட்களாக உணவகங்களில் பணியாற்றக் […]

நிமோனியா, மூளைக்காய்ச்சல் தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்க நவி மும்பையில் உள்ள நிறுவனத்திற்கு மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆதரவு. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 16-வேலண்ட் நிமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசியை (பிசிவி-16) உற்பத்தி செய்வதற்கான வணிக அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்கு, நவி மும்பையில் உள்ள டெக்இன்வென்சன் லைப்கேர் நிறுவனத்திற்கு நிதி உதவியை அனுமதித்துள்ளது. நிமோனியா, மூளைக்காய்ச்சல், காது தொற்று போன்றவற்றிலிருந்து தடுக்க […]

குறைவான எடையுடன் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளின் இறப்பைத் தடுக்க பிசிஜி தடுப்பூசி அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பச்சிளங்குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 1000 குழந்தைகளுக்கு 24.9 என்ற அளவில் உள்ளது. இது வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள விகிதத்தைக் காட்டிலும் அதிகமானதாகும். பச்சிளங்குழந்தைகளின் இறப்பிற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக குறை மாதத்தில் பிறப்பது அதாவது 37 வாரங்கள் முடிவடைவதற்குள் பிறக்கும் குழந்தைகள், இரண்டாவதாக பாக்டீரியா கிருமிகள் மூலம் […]

திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசியுடன் நேரடி தொடர்பு உள்ளதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவ ஆராய்ச்சி இந்திய கவுன்சில், நோய் கட்டுப்பாட்டு தேசிய மையம் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து என டாக்டர் முர்ஹேகர் தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிடத்தக்க சமீபத்திய ஆய்வை சுட்டிக்காட்டிய டாக்டர் முர்ஹேகர், இளைஞர்களிடையே திடீர் இதய இறப்புகள் பற்றி அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில் ஐசிஎம்ஆர்-என்ஐஇ நடத்திய விரிவான ஆய்வைக் குறிப்பிட்டு, கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் […]

“கொரோனா வேக்சின் போட்டுக் கொள்ளாத கொங்கு மணமகள் தேவை” என்ற தலைப்பில் சமீபமாக ஒரு திருமண விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2023 மே 24ஆம் தேதியன்ற நாளிதழில் வந்த பழைய ஒரு விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் புதியதாக பரவி வருகிறது. அந்த விளம்பரத்தில், கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, அதே சமூகத்தைச் சேர்ந்த வேக்சின் போடாத மணமகள் தேவை […]