கோவை மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால், […]