பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் தனது கட்சி அலுவலகத்தில் பெரியாரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 1879-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்த பெரியார், தமிழ்நாட்டின் சமூக நீதி கொள்கைகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார்.. சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, பெண் கல்வி, சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு சிந்தனைகளுடன் தனது வாழ்நாள் முழுவது போராட்டங்களை நடத்தியவர்.. மக்களிடையே சமத்துவம் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை […]

இன்று ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றிய விஜய் எப்போதும் போல திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது “ ஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு தரமான விலை கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள், அந்த யோசனை எல்லாம் திமுக அரசுக்கு கிடையாது.. 24 மணி நேரமும் விஜய்யை பற்றி தான் அவர்களுக்கு யோசனையே.. விஜய்யை எப்படி எதிர்க்கலாம், தவெகவை எப்படி முடக்கலாம் என்று தான் அவர்கள் யோசிக்கிறார்கள்.. மணல் கொள்ளையை மட்டும் தொடர்ந்து […]

விஜய் பரப்புரை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் கருதி இன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்களை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து தவெகவில் புதிதாக இணைந்த அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் ஏற்பாட்டில் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை […]

ஈரோட்டில் இன்று நடக்கவிருக்கும் ‘விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ தொடர்பாக 11 வழிகாட்டு நெறிமுறைகளை தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று ஈரோடு மாவட்டம், மூங்கில்பாளையத்தில் காலை 11.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காவல் துறையின் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற உள்ள இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்சியினரும், பொதுமக்களும் […]

ஈரோட்டில் 18-ம் தேதி நடக்கவிருக்கும் ‘விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ தொடர்பாக 11 வழிகாட்டு நெறிமுறைகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 18-ம் தேதி (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம், மூங்கில்பாளையத்தில் காலை 11.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காவல் துறையின் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற […]

தவெக தலைவர் விஜய் உடன் 25 ஆண்டுகாலம் பயணித்த பி.டி. செல்வக் குமார் திமுகவில் இணைந்தார்.. இவர் 2003-ம் ஆண்டு முதல் விஜய்க்கு மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தவர்.. விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தை பி.டி. செல்வக்குமார் தான் தயாரித்திருந்தார்.. இவர் கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருந்தார்.. இவர் சமீபத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் பிடி. செல்வக்குமார் திமுகவில் இணைந்தார்.. இந்த நிலையில் பிரபல யூ […]

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் […]