காதலனுடன் வெளிநாடு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த காதலி, சாட்ஜிபிடி-யிடம் ஆலோசனை பேரில் விசா இல்லாமல் சென்று விமானத்தை தவறவிட்டதால் கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மேரி கால்டாஸ் (Mery Caldass) என்பவர், தனது காதலருடன் பியூர்டோ ரிகோவுக்கு விடுமுறை பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்திற்கு விசா தேவைப்படும் என்று ChatGPT-யிடம் அட்வைஸ் கேட்டுள்ளார். அதற்கு, விசா தேவையில்லை என்று சாட்ஜிபிடி பதில் அளித்துள்ளது. […]

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் 30 வயது நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறந்தவர் மோனு என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் திருடியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் ஒரு முஸ்லிம் கும்பலால் அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. புதானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்பலா சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில், பலத்த காயமடைந்த மோனு, பின்னர் அவர் உயிரிழந்தார். 30 […]

லாரி மோதிய விபத்தில் இறந்த மனைவியின் உடலை ஒரு கணவர் சுமந்து செல்லும் வீடியோ வைரலான ஒரு வாரத்திற்குப் பிறகு, நாக்பூர் போலீசார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். விபத்து நடந்த உடன் உதவி மறுக்கப்பட்டதால், அந்த நபர் தனது மனைவியின் உடலை தனது பைக்கில் சுமந்து செல்வதைக் காட்டும் வீடியோ கடந்த வாரம் வெளியானது. ஆகஸ்ட் 9 அன்று நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்துக்குப் பிறகு யாரும் […]

தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத்தில் உள்ள ஒரு இனிப்புக் கடைக்கு ஒரு குடும்பத்தினர் சென்றனர்.. அவர்கள், தங்கள் காரை ஒரு இனிப்புக் கடைக்கு வெளியே நிறுத்தியபோது, சாவி உள்ளே இருந்ததால் தவறுதலாக கதவுகளை மூடினர். ஆனால் அவர்களின் குழந்தை தவறுதலாக காரில் பூட்டப்பட்டது.. இதனால் குழந்தை காருக்குள் சிக்கிக் கொண்டதால், வெளியே வர முடியவில்லை. ஆனால் ஒரு புத்திசாலித்தனமான ஒரு நபர், மொபைல் போன் வீடியோவைப் பயன்படுத்தி குழந்தையை […]

தாய்லாந்தில் 17 வயது மாணவர் ஒருவர் அரையாண்டு தேர்வில் இரண்டு மதிப்பெண்கள் இழந்ததால் தனது கணித ஆசிரியையை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய மாகாணமான உதை தானியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன… தேர்வில் 20க்கு 18 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் பெற்றதால், அந்த மாணவர் தனது ஆசிரியையை, வகுப்பின் முன் […]

டெல்லி தம்பதியினர் தங்கள் மகளை உளவு பார்க்க முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.. தனியார் துப்பறியும் பணியாளரான தன்யா பூரி இதுகுறித்து பேசி உள்ளார். இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.. என்ன நடந்தது? ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில், பேசிய தன்யா பூரி “டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு பெண்ணுக்கு காதலன் இருப்பதாக அவரின் பெற்றோருக்கு அடிக்கடி சந்தேகம் இருந்தது, ஆனால் அப்பெண் அதைச் சொல்லவில்லை. […]

தாய்லாந்து திருடன் ஒரு பெண்ணிடம் திருட முயன்ற போது, அதில் தோல்வியடைந்ததால், அவரிடம் மன்னிப்பு கேட்கும் ஒரு வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆனால் திருட்டு முயற்சி தோல்வியடைந்ததால் திருடிய நபருக்கு பண வெகுமதியும் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.. இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில், திருடன் முகக்கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது.. அந்தப் […]

‘நம்பமுடியாத இந்தியா’ என்ற பிரபலமான சொற்றொடரை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.. இந்தியாவில் உள்ள பல்வேறு புவியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைகளுக்கு ஏற்றதாக மட்டுமல்லாமல், இந்தியர்கள் எவ்வளவு தனித்துவமானவர்களாக இருக்க முடியும் என்பதற்கான உதாரணம் தான் இந்த சொற்றொடர்… இதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், ஒரு பெண் சிறுத்தைக்கு ராக்கி கட்டும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.. இது பழைய வீடியோ என்றாலும் இன்று ரக்ஷா பந்தன் என்பதால் இந்த […]

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சாலையோர கடை உணவு விற்பனையாளர் சீல் செய்யப்பட்ட எண்ணெய் பாக்கெட்களை நேரடியாக கொதிக்கும் எண்ணெயில் போடுவதைக் காணலாம். பிளாஸ்டிக் மென்மையாகி உடைந்தவுடன், எண்ணெய்யை நேரடியாக பாத்திரத்தில் ஊற்றுகிறார். பஞ்சாபின் லூதியானாவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.. பஜ்ஜி தயாரித்துக்கொண்டிருந்த விற்பனையாளர், எண்ணெய் பாக்கெட்டை எளிதாகத் […]