12 மணி நேர வேலை மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே மாதம் 2ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்……!

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் மே மாதம் 2ம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சென்ற மாதம் ஆரம்பமாகி 21ஆம் தேதி வரையில் நடைபெற்றது. அதன்பிறகு சட்டப்பேரவையை சபாநாயகர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.


இத்தகைய சூழ்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே மாதம் 2ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணி அளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதனை செயல்படுத்தும் முறைகள் தொடர்பாக அமைச்சரவை சகாக்களுடன் முதல்வர் ஆலோசிப்பார் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று தகவல் கிடைத்திருக்கிறது. 12 மணி நேர வேலை குறித்த சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு கடுமையான எதிர்ப் கிளம்பி இருக்கின்ற சூழ்நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

குடித்துவிட்டு தினமும் சண்டை..!! அதிகாலையில் அலறிய குரல்கள்..!! கடலூரில் பரபரப்பு சம்பவம்..!!

Sun Apr 23 , 2023
கடலூர் மாவட்டம் தோப்புக்கொல்லை தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அருள் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி (32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஹரிணி (8), ஹேமலதா (6) என்ற இரண்டு மகள்களும், குமுதன்(5) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில், அருள் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது அருளின் […]
குடித்துவிட்டு தினமும் சண்டை..!! அதிகாலையில் அலறிய குரல்கள்..!! கடலூரில் பரபரப்பு சம்பவம்..!!

You May Like