CM ஸ்டாலின் அதிரடி…! 10 துறைகளின் செயல்பாடுகள் குறித்து 4 மணி நேரம் தொடர் ஆய்வு…!

mks Stalin 2025

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து நான்கு மணி நேரம் தொடர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை, இயற்கை வளங்கள் துறை, போக்குவரத்துத் துறை, உயர்கல்வித் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து சுமார் நான்கு மணி நேரம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நிலப் பயன்பாட்டு தகவல் அமைப்பு, நீடித்த நிலையான சுரங்க கொள்கையை உருவாக்கும் பணிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாட்டுத் திறன், சேவை வழங்கல் மற்றும் நிதி நிலையை மேம்படுத்தும் திட்டம், சமூக நீதி விடுதிகளின் செயல்பாடுகள், 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படைக் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன் வளர்க்கும் திட்டம், அமைப்புசார நலவாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது, ஆதிதிராவிட, பழங்குடியின தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு வளாகங்கள் கட்டுமானப் பணிகள் போன்ற பல்வேறு துறைகளின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு, விவரங்களை கேட்டறிந்தார். துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் உரிய காலத்திற்குள் விரைவாக முடித்திட உயர் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

Vignesh

Next Post

அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.. 8-வது ஊதியக்குழு அமைக்க மேலும் தாமதம் ? முழு விவரம் இதோ..

Tue Jul 8 , 2025
8-வது ஊதியக்குழு எப்போது அமைக்கப்படும் என்பது தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.. மத்திய அரசு ஊழியர்கள், 8-வது ஊதிய குழு எப்போது அமைக்கப்படும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் தற்போது அரசு ஊழியர்களுக்கு கவலையளிக்கும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.. ஆம்.. 8வது சம்பளக் குழுவின் கீழ் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) செயலாளர் நிலை பதவிகளை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. இதனால் 8வது […]
AA1FgRsJ 1

You May Like