M.K.Stalin: இன்று காலை 9.40 மணிக்கு மும்பை செல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்…!

ராகுல்காந்தி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை மும்பை செல்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். தற்போது இந்த யாத்திரை மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. ராகுல்காந்தியின் யாத்திரை இன்று மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் நிறைவடைகிறது. இன்று மாலை மும்பை சிவாஜி பார்க்கில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார்.

கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்-சரத் சந்திர பவார் தலைவர் சரத்பவார் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9.40க்கு பயணிகள் விமானம் மூலம் மும்பை செல்கிறார். மும்பை செல்லும் அவர், ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்துகொள்கிறார். மேலும் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். தமிழ்நாட்டில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

Vignesh

Next Post

Shoking: தொழிற்சாலையில் திடீர் விபத்து... 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி...!

Sun Mar 17 , 2024
ஹரியானாவில் தொழிற்சாலையில் திடீர் விபத்து… 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள தொழிற்பேட்டையில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையின் கொதிகலனில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 100-க்கும் மேற்பட்டோர் பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், ஏராளமான தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் படுகாயம் அடைந்த அனைவரும் ரேவாரியில் உள்ள சிவில் […]

You May Like