நோய் வந்த தெரு நாய்களை கருணைக் கொலை செய்யலாம்…! தமிழக அரசு அனுமதி…!

dog 2025

நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் கால்நடை துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ‘நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணை கொலை செய்யலாம். இந்த பணியை பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் செய்ய வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் சரியான முறையில் அடக்கம் செய்ய வேண்டும்.


தமிழகத்தில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் தொல்லைகளும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சாலைகள், தெருக்களில் செல்லவே அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, தெரு நாய் கடியால் குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெரு நாய்களால், சாலை விபத்துகளும் ஏற்படுகின்றனர். தமிழகத்தில் கடந்த ஓராண்டில் லட்சக்கணக்கான மக்கள் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தெரு நாய்கள் கடிக்கும்போது, அந்த தொற்று மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் உயிரிழப்பும் நேரிடுகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Vignesh

Next Post

நோட்!. இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டும்தான்!. Gpay, Phonepe-ல் ஆக.1 முதல் புதிய விதிகள் அமல்!. என்னென்ன தெரியுமா?

Mon Jul 28 , 2025
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஜிபே, போன்பே, BHIM உள்ளிட்ட பணப்பரிமாற செயலில்களில் புதிய விதிகள் அமல்படுத்தப்படவுள்ளன. கூகிள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் பிற தளங்களில் UPI செயலி பயன்பாட்டை எளிமையாகவும் எளிதாகவும் மாற்றுவதற்காக, அதிக கட்டண போக்குவரத்து காரணமாக அமைப்பை மேம்படுத்தவும் நெரிசலை நிர்வகிக்கவும் இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) பல புதிய UPI விதி மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பு சரிபார்ப்பு வரம்புகள்: ஆகஸ்ட் 1 […]
phonepe google pay upi 1200 jpg 1742533496946 1742533496227 1200x675 1

You May Like