குட் நியூஸ்..! பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.128.43 கோடி ஊக்கத்தொகை..! தமிழக அரசு அறிவிப்பு…!

Tn Govt 2025

ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வரும் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.128.43 கோடி ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கடந்த 05.11.2022 முதல் ஆவின் பால் கொள்முதல் விலை பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.32/-லிருந்து ரூ.35/-ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.41/-லிருந்து ரூ.44/- ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களிடையே கறவை மாடு வளர்ப்பை ஊக்குவிக்கவும் பால் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்திலும், கடந்த 18.12.2023 முதல் சங்கங்களுக்கு பால் வழங்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.3/- வீதம் பால் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.

கடந்த டிசம்பர் 2023 முதல் மார்ச் 2025 வரை தமிழ்நாடு அரசிடமிருந்து ரூ.407.66 கோடி பால் கொள்முதல் ஊக்கத் தொகை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3.80 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்து தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகளவில் பால் வழங்கி வருகின்றனர். மேலும் தற்போது ஏப்ரல் 2025 முதல் ஜூன் 2025 வரையிலான காலத்திற்கு பால் கொள்முதல் ஊக்கத்தொகையாக ரூ.128.43 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பால் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாத்திட தேவையான அனைத்து உதவிகளையும் ஆவின் நிறுவனத்திற்கு தொடர்ந்து வழங்கி வருவதால், கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் பால் உற்பத்தி தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு, ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கி மென்மேலும் பொருளாதார மேம்பாடு அடைந்திடவும். கிராமப் பொருளாதாரம் உயர்ந்திடவும் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: டாய்லெட்டில் நீண்ட நேரம் போன் யூஸ் பண்றீங்களா?. மூலநோய் ஏற்படும் ஆபத்து!. மருத்துவர்கள் எச்சரிக்கை!.

Vignesh

Next Post

Rain: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை...!

Sat Aug 9 , 2025
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்தில் இருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் […]
rain 1

You May Like