சூப்பர் திட்டம்..! 25 வயது மேல் உள்ள வணிகம் செய்யும் பெண்களுக்கு… தமிழக அரசு வழங்கும் மானியம்…!

Gemini Generated Image 1org9g1org9g1org 1

உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

2025- 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது. மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5,000/- மானியத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கத் தேவையான சான்றிதழ்கள்:- இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் கீழ்க்கண்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூர்வீகமாக (பிறப்பிடச்சான்று). வசிப்பவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று. திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள். ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (வருமானச்சான்று வட்டாட்சியரிடமிருந்து பெறுதல் வேண்டும்.

எனவே. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவர்கள் தங்களது விண்ணப்பங்களை 14.07.2025 க்குள், தருமபுரி மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டடம் பின்புறம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி மாவட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிரகரிக்கப்படும். இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர்.

Read more: 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாள்!. அவசர நிலை பிரகடனத்தை எதிர்கொண்ட இந்தியா!. இருளில் மூழ்கிய தேசம்!. பின்னணி இதோ!

Vignesh

Next Post

குட்நியூஸ்!. இனி ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே ரிசர்வேஷன் சார்ட் ஒட்டப்படும்!. இந்திய ரயில்வே அதிரடி!.

Mon Jun 30 , 2025
ரயில் டிக்கெட் முன்பதிவுகளின் போது பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. நேற்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மாற்றங்களில் தரவரிசையில் முன்னேற்றங்கள், புதிய பயணிகள் முன்பதிவு முறை (PRS) மற்றும் தட்கல் முன்பதிவுகளுக்கான நெறிப்படுத்தப்பட்ட அங்கீகாரம் ஆகியவை அடங்கும். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த வரவிருக்கும் சீர்திருத்தங்களை மதிப்பாய்வு செய்துள்ளார். “டிக்கெட் முறை ஸ்மார்ட்டாகவும், வெளிப்படையாகவும், […]
train

You May Like