தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் மானியம்…! முழு விவரம் இதோ

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மக்களின்‌ பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்தின் கீழ்‌ 50 உறுப்பினர்களைக்‌ கொண்ட மகளிர்‌ கூட்டுறவு பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர்‌ மகளிர்‌ மற்றும்‌ ஒரு பழங்குடியின மகளிருக்கு தலா ரூ.1 இலட்சம்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தாட்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கு தாட்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்‌ கீழ்‌ 50 உறுப்பினர்களைக்‌ கொண்ட மகளிர்‌ கூட்டுறவு பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ அமைத்திட ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்‌ பயன்‌ பெற ஆதிதிராவிடர்‌ பயனாளிகள்‌ https://application.tahdco.com என்ற இணையதளத்திலும்‌, பழங்குடியினர்‌ பயனாளிகள்‌ https://fast.tahdco.com என்ற இணையதளத்திலும்‌ பதிவு செய்து பயன்பெறலாம்‌.

இளைஞர்களுக்கு மானியம்

தமிழ்நாடு அரசு ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள்‌ புதிதாக சுயதொழில்‌ தொடங்க முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோரின்‌ தொடக்க முன்னெடுப்புகளை ஆதரித்து, நெறிப்படுத்தி, ஊக்குவிக்கும்‌ நோக்கத்துடன்‌ புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது..

இத்திட்டத்தின்‌ கீழ்‌ உற்பத்தி மற்றும்‌ சேவை சார்ந்த, திட்டத்தொகை ரூ.10 இலட்சத்துக்கு மேலும்‌ ரூ.50 இலட்சத்தை மிகாமலும்‌ உள்ள தொழில்‌ திட்டங்களுக்கு மானியத்துடன்‌ கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது. மானியம்‌ திட்டத்‌ தொகையில்‌ 25% பட்டியல்‌ வகுப்பு, பட்டியல்‌ பழங்குடி இனம்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறனாளிகளுக்குக்‌ கூடுதல்‌ மானியமாக திட்டத்தொகையில்‌ 10% வழங்கப்படுகிறது. மானிய உச்ச வரம்பு ரூ.75 இலட்சம்‌. மேலும்‌, கடனைத்‌ திரும்பச்‌ செலுத்தும்‌ காலம்‌ முழுமைக்கும்‌ 3% வட்டி மானியமும்‌ வழங்கப்படுகிறது.

Vignesh

Next Post

கைவிடப்பட்ட மீட்பு பணி..!! கல்குவாரி விபத்தில் 7 தொழிலாளர்களின் சடலம் மீட்பு..!! மீதமுள்ள 8 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு..!!

Wed Nov 19 , 2025
உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் இயங்கி வந்த கல்குவாரி ஒன்றில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 16 தொழிலாளர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 4 நாட்களுக்கும் மேலாக நீடித்த மீட்புப் பணி, பாறை இடிபாடுகளை முழுமையாக அகற்ற முடியாததால் தோல்வியில் முடிந்து, கைவிடப்பட்டுள்ளது. சோன்பத்ரா பகுதியில் செயல்பட்டு வந்த இந்தக் கல்குவாரியில், பூமிக்கு அடியில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்தன. […]
UP 2025

You May Like