மின் உபகரணங்கள் கொள்முதல் செய்ய தாட்கோ மூலம் மானியம் வழங்கப்படுகிறது. அதே எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஆவின் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டுகடை அமைத்து ஆவின் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். தொழில் செய்ய தாட்கோ மூலம் மின் வாகனம், உறைவிப்பான், குளிர்விப்பன் போன்ற மின் உபகரணங்கள் கொள்முதல் செய்ய தாட்கோ மூலம் ஒருவருக்கு ரூ.3 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியமாக ரூ.90 ஆயிரம் வழங்கிட அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேலே குறிப்பிட்ட ஆவணங்களுடன் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த 1000 விவசாயிகளின் கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மதிப்பீட்டில் விதைத் தொகுப்பு மற்றும் புல்கடணைகள் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் /ஆவின் நிறுவனம் மூலம் ரூ.1.00 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதை தொகுப்பு மற்றும் புல்கறணைகள் பெறும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியின விவசாயிகளாக இருக்க வேண்டும்.



