சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு…!

Tn Govt 2025

சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தும் வகையில், தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.


முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் ஆகிய சிறுபான்மையின மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலையை மேம்படுத்த தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தும் வகையில், தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள அரசாணையில்: சிறுபான்மையினர் நலத் திட்டங்களை மாவட்ட அளவில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தும் வகையில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் த.இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் டாக்டர் அ.சுபேர்கான், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகிய உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைத்து அரசு ஆணையிடுகிறது.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் ஆகிய சிறுபான்மையின மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலையை மேம்படுத்த தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்புக் குழு மாவட்ட அளவில் ஆய்வு மேற்கொண்டு அவற்றை விரைவுபடுத்துவதற்கான பணிகளை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக். 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்...! பள்ளி கல்வித்துறை உத்தரவு...!

Sat Sep 20 , 2025
உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு […]
school 2025 2

You May Like