படித்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கடன் உதவித்தொகை…! எப்படி பெறுவது…?

தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ கடன் பெற விண்ணப்பிக்கலாம்.


தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 லட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 லட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 லட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம்‌ வரை பெறலாம்‌.

ஏற்கனவே உள்ள UYEGP மற்றும்‌ NEED திட்டத்தில்‌ பொதுப்பிரிவு ஆண்களுக்கு சுய தொழில்‌ செய்வதற்கு அதிகபட்சமாக 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்‌. எஸ்‌.சி., எஸ்‌.டி., எம்‌.பி.சி., பி.சி, சிறுபான்மையினர்‌, பெண்கள்‌, முன்னாள்‌ ராணுவ வீரர்‌ ஆகியோர்‌ 45 வயது வரை கடன்‌ பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய அரசாணை படி UYEGP மற்றும்‌ NEED திட்டத்தில்‌ பொதுப்பிரிவு ஆண்களுக்கு 45 வயது வரையிலும்‌, எஸ்‌.சி., எஸ்‌.டி, எம்‌.பி.சி., பி.சி., சிறுபான்மையினர்‌, பெண்கள்‌, முன்னாள்‌ ராணுவ வீரர்‌ ஆகியோர்க்கு 55 வயது வரையிலும்‌ வங்கியில்‌ விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Vignesh

Next Post

மீதமான பீட்சாவை மறுநாள் காலை சாப்பிடுகிறீர்களா?. உடலில் என்ன நடக்கும் தெரியுமா?. நிபுணர் கூறும் உண்மை!.

Sun Aug 31 , 2025
ஜங்க் ஃபுட்டாக இருந்தாலும் கூட பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது பீட்சா. சமீபத்திய ஆண்டுகளில் எண்ணற்ற புது புது உணவுகள் வந்து விட்டாலும் கூட மக்களுக்கு பீட்சா மீதான ஆர்வம் சிறிதும் குறையவில்லை. பீட்சாவின் தனித்துவமான சுவைக்கு, சீஸ் சேர்க்கப்படுவது மற்றும் நமது விருப்பத்திற்கு ஏற்ப பீட்சாக்களின் டாப்பிங்ஸை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மேலும் பீட்சாக்கள் விரைவாக கிடைக்க கூடியவையாக […]
pizza 11zon

You May Like