மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் கொடுக்கும் தமிழக அரசு…! எப்படி பெறுவது தெரியுமா…?

tn Govt subcidy 2025

உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்


சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025- 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது.

மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5,000/- மானியத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கத் தேவையான சான்றிதழ்கள்:- இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் கீழ்க்கண்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூர்வீகமாக (பிறப்பிடச்சான்று). வசிப்பவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று. திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள். ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (வருமானச்சான்று வட்டாட்சியரிடமிருந்து பெறுதல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர்.

Vignesh

Next Post

உடல் எடையை குறைக்க தினமும் சப்பாத்தி சாப்பிடுகிறீர்களா..? அப்போ இத கட்டாயம் படிங்க..

Mon Oct 6 , 2025
Do you eat chapatis every day to lose weight? Then you must read this..
chappati

You May Like