புதுமைபெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் ரூ. 1000 கல்வி உதவித் தொகை பெற உயர்கல்வி பயிலும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்பதை தளர்வு செய்யப்பட்டுள்ளது.
சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் கல்விக்கு உதவும் வகையில் பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்பு படிக்கும் அனைத்தும் திருநங்கைகளுக்கும் விடுதி கட்டணம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் உயர்கல்விக்கான புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் அனைத்து திருநங்கை, திருநம்பி, இடைபாலினர்களுக்கு சமூக பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்து, வாழ்க்கையில் வெற்றி பெற ஏதுவாக 2025-2026ஆம் நிதியாண்டு முதல் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்ட தகுதி வரம்புகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அனைத்து திருநங்கையர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்பதை முற்றிலுமாக தளர்வு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் திருநம்பி, இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்கள் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை சான்றாக சமர்ப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது. திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர்கள், சமூகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் திருநங்கையரும் பயன்பெற அளிக்கப்பட்டுள்ள இத்தளர்வு பாலின வேறுபாடின்றி திருநங்கையரும் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்வதற்கான முக்கியமான படியாகும். எனவே இத்திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் பயன்பெறலாம்.
Read more: சரத்குமாரின் 3BHK மட்டும் இல்ல.. இன்னும் ரெண்டு படம் இருக்கு.. நீங்க எந்த படத்துக்கு போறீங்க..?