விவசாயிகளுக்கு ரூ.3000 வழங்கும் தமிழக அரசின் சூப்பர் திட்டம்…! எங்கு சென்று விண்ணப்பிப்பது…?

farmers 2025

நடப்பாண்டில் (2024-2025ஆம் ஆண்டிற்கு) “பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க பழந்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்கும்விக்கும் திட்டத்தின் கீழ் 50 ஏக்கர் பரப்பளவில் 1 ஏக்கருக்கு ரூ.3,000/- வீதம் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படவுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள விவசாயிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் சொந்தமாக கால்நடைகள் வைத்திருக்கும் விவசாயிகள் அவர்களது சொந்த நிலத்தில் பாசன வசதியுடன் (குறைந்த பட்சம் 0.5 ஏக்கர் பராமரிக்கும், வளர்க்கப்படும் தோட்டப்பயிர்கள், பழத்தோட்டங்களில் இடையே ஊடு பயிராக தீவனப்பயிர் வளர்க்கவும், குறைந்தப்பட்சம் 3 ஆண்டுகளுக்கு வளர்த்திட விருப்பம் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படும். நீர்பாசன வசதி/அடுத்தடுத்து பயிரிடுவதற்கு பாசன வசதி உடைய ஒரு நபர்களுக்கு 1 ஹெக்டர் வரை வழங்கப்படும். பசுமையான தீவனப்பயிர்கள் வளர்க்க விருப்பம் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைய தகுதியுடையவர் ஆவார்.

மேலும், சிறு,குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் குறிப்பாக 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நீர் பாதுகாப்பு நடவடிக்கைக்களை பின்பற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சொந்தமாக வைத்திருக்கும் கால்நடைகளுக்கு தேவையான தீவனப்பயிர் தேவைக்கு அதிகமாக உள்ள உபரி தீவனப்பயிர்களை நிலமற்ற கால்நடை வைத்திருக்கும் கால்நடை உரிமையாளருக்கு விற்பனை செய்ய விருப்பம் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

எனவே, இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைத்தால் உங்களுக்கான மானிய தொகை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

Read more: வெள்ளையனே வெளியேறு இயக்கம்!. மகாத்மா காந்தி கூறிய அந்த வார்த்தை!. பரபரப்பான தமிழ்நாடு!. இந்திய சுதந்திரத்திற்கு எவ்வாறு உதவியது?.

Vignesh

Next Post

நில ஊழல் வழக்கு!. சட்டவிரோதமாக ரூ.58 கோடி வருமானம்!. ராபர்ட் வதேரா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமலாக்கத்துறை!.

Mon Aug 11 , 2025
குருகிராமில் நடந்த நில விவகாரம் தொடர்பான ஊழல் வழக்கில், தொழிலதிபரும், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வாத்ரா, சட்டவிரோத முறையில் ரூ.58 கோடி வருமானம் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. இந்த நிதிகளை ராபர்ட் வாத்ரா சட்டவிரோதமாக பெறப்பட்டதாகக் குறிப்பிட்ட அமலாக்கத்துறை, இந்த நிதியை வதேரா அசையா சொத்துக்களை வாங்கவும், முதலீடுகளை செய்யவும், கடன்கள் மற்றும் முன்பணங்களை வழங்கவும், அவருடன் தொடர்புடைய குழு நிறுவனங்களின் பாக்கிகளைத் […]
Robert Vadra land deal ED 11zon

You May Like