இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளது…! முதல்வர் ஸ்டாலின் உறுதி…!

tamilnadu cm mk stalin

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்: டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இந்த பெருந்துயரில் தமிழகமும், தமிழக மக்களும் பங்கெடுக்கிறோம்.

இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளை மீட்க அயலகத் தமிழர் நலன், மறுவாழ்வுத் துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நவ.11-ம் தேதி முதல்கட்டமாக 113 ஆண்கள், 60 பெண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 177 பேர் தமிழகத்துக்கு திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு மத்திய அரசின் மூலம் உணவுப் பொருட்கள், மருந்துப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி, அவர்கள் மீண்டெழுவதற்கு உதவிக்கரம் நீட்ட தமிழக அரசு தயாராக இருக்கிறது.இதற்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைக்குமாறு தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

சிவகங்கை பேருந்து விபத்து.. பிரதமர் மோடி இரங்கல்! ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!

Mon Dec 1 , 2025
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம். காரைக்குடி திருப்பத்தூர் -சாலை, கும்மங்குடி கிராமத்தில் நேற்று பிற்பகல் அறந்தாங்கியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில், பேருந்துகளில் பயணம் செய்த ஒன்பது பெண்கள். இரண்டு ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 54 நபர்கள் காயம் அடைந்துள்ளனர்.. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பதிற்கு முதல்வர் ஸ்டாலின் […]
PM Modi 2025

You May Like