பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் மதுரையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி, மதுரையில் இன்று தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்.
13-ம் தேதி சிவகங்கை, 14-ம் தேதி செங்கல்பட்டு வடக்கு, 15-ம் தேதி சென்னை வடக்கு, 16-ம் தேதி மத்திய சென்னை, 24-ம் தேதி அரியலூர், பெரம்பலூர், 25-ம் தேதி தஞ்சாவூர் வடக்கு, 27-ம் தேதி திருச்சி, 28-ம் தேதி திண்டுக்கல் கிழக்கு, 29-ம் தேதி நாமக்கல் கிழக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அடுத்து, நவம்பர் 3-ம் தேதி ஈரோடு தெற்கு, 4-ம் தேதி கோவை வடக்கு, 5-ம் தேதி நீலகிரி, 6-ம் தேதி திருப்பூர் தெற்கு என தொடர்ந்து, சேலம், தருமபுரி, தஞ்சாவூர் தெற்கு என 28 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நயினார் நாகேந்திரன் 22-ம் தேதி தூத்துக்குடி தெற்கில் நிறைவு செய்கிறார். பின்னர் இரண்டாம் கட்ட பயணத்தை தேனியில் நவம்பர் 24-ம் தேதி தொடங்குகிறார்.
தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி, மதுரையில் இன்று தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.