தமிழகத்தில் வரும் 26 ஆம் தேதி வரையில் குடையை மறந்துவிடாதீர்கள்…..! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவு வரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கிழக்கு மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் காரணமாகவும் தமிழகத்தில் வரும் 26 ஆம் தேதி வரையில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று உள்ளிட்ட இரண்டும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது.

ஆகவே மீண்டும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசாந்த முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல வரும் 24ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஊரிலும் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ததற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசனது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகப்பட்ச வெப்ப நிலை 36முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டியே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரியில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. அதேபோல தமிழக மீனவர்களை பொறுத்தவரையில் இன்றும், நாளையும் மன்னார் வளைகுடா தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று அதிக அளவில் வீச கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஆந்திர கடலோர பகுதிகள் இலங்கை கடலோர பகுதிகள் ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 40 முதல், 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

Next Post

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே….! பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம்…..!

Thu Jun 22 , 2023
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்னமனூரில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னாகரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான காலியிடம் இருக்கிறது. அந்த இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தைச் சார்ந்தவர்கள் குடிசை அமைத்து இலவச காளி வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இது தொடர்பாக சின்னமனூர் […]
தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

You May Like