ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து தமிழ்நாடு போராடும்.. தீரன் சின்னமலை பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை..

stalin dmk n

தமிழகத்தின் கொங்கு மண்டலப் பகுதியில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட ஒரு மாவீரர். திருப்பூர் மாவட்டம் மேலப்பாளையத்தில் பிறந்த இவரது இயற்பெயர் தீர்த்தகிரி ஆகும். திப்பு சுல்தானுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்ட அவர், 1801, 1802, 1804-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் வெள்ளையர்களை வென்று, ஓடாநிலையில் கோட்டை அமைத்து ஆட்சி செய்தார்.


ஆங்கிலேயப் படையை ஓட ஓட விரட்டி, அரச்சலூர், ஓடாநிலை போன்ற இடங்களில் நடந்த போர்களில் வெற்றி வாகை சூடினார்.
இறுதிக்காலம்: தன் சமையல்காரரின் துரோகத்தால் ஆங்கிலேயரிடம் பிடிபட்ட சின்னமலை, ஆகஸ்ட் 3, 1805 அன்று சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

இந்த நிலையில் தீரன் சின்னமலையில் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் ” பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்!

அன்று, நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் சூழ்ச்சியால்தான் சின்னமலையை வீழ்த்த முனைந்தார்கள்!

இன்றோ, தமிழ்நாட்டுக்குள் நேரடியாக நுழைய முடியாத டெல்லி ஆதிக்கவாதிகள் ‘தொகுதி மறுவரையறை’ எனும் சதித் திட்டத்தால் நம்மை அரசியல் வலிமையற்றவர்களாக்க முனைகிறார்கள்.

அன்று, சின்னமலையைக் காட்டிக் கொடுத்தான் ஒரு துரோகி. இன்றும் சில அடிமைகள் தங்கள் சுயநலத்துக்காகத் தாய்த்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே RSS எஜமானர்களின் காலடியில் அடகு வைக்கின்றனர்.

இந்த ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து #TNWillFightTNWillWin எனத் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன்! #வெல்வோம்_ஒன்றாக!” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

Flash : குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ. 1,200 குறைந்த தங்கம் விலை..!

Fri Apr 17 , 2026
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
gold jewelery

You May Like