11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட தேநீர்!… முதலில் எங்கு, எப்படி உருவானது தெரியுமா?… சுவாரஸ்ய கதை!

தண்ணீருக்கு அடுத்தபடியாக மனிதர்கள் அதிகமாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். ஆதி காலத்தில் இருந்தே இந்த தேநீர் பானமாக குடிக்கப்பட்டுள்ளது. கிமு 2732 ஆண்டுகளுக்கு முன்பே தேனீர் கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாறு சொன்னாலும் ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் மக்கள் 11,000 ஆண்டுகளுக்கு முன்பே பீங்கான் பாத்திரத்தை தேநீர் அருந்துவதற்கு மக்கள் பயன்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.

சீனாவில் உள்ள ஷென் நங் என்னும் பேரரசர் கிமு 2732 ஆம் ஆண்டில் சுவாரஸ்யமாக தேயிலை பானத்தை கண்டுபிடித்தார் என சொல்கிறார்கள். பேரரசர் காட்டுப்பகுதியில் செடிகளின் கீழ் அமர்ந்து தண்ணீரை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தாராம். அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு இலை கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் விழுந்துள்ளது. பேரரசரும் அந்த தண்ணீரை எடுத்து பருகி உள்ளார்.

அதனுடைய மென்மையான சுவை மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அவரை அதற்கு அடிமையாக்கி உள்ளது. அவர் கொதிக்க வைத்திருந்த அந்த தண்ணீரில் விழுந்த இலை தேயிலை இலை. அதுவரைக்கும் இப்படி ஒரு வித்தியாசமான பானத்தை அவர் குடித்ததில்லையாம். இந்த பானத்தை குடித்த பிறகு அதன் சுவையில் மயங்கிய அவர் அதற்கு சா(ch’a) என பெயரிட்டார். அப்படி என்றால் சீன மொழியில் அதற்கு விசாரணை என பொருளாம். எதற்காக இப்படி ஒரு பெயரிட்டார் என்பது தெரியவில்லை. அதிலிருந்து சீனாவில் தேநீர் மிகவும் பிரபலமாக தொடங்கியுள்ளது.

17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை எல்லா சீன தேநீர் வகைகளும் பச்சை தேயிலை கொண்டு தயாரிக்கப்பட்டன. அதன்பிறகு சீனாவில் வெளிநாட்டு வர்த்தகம் அதிகரித்ததால் சீன விவசாயிகள் தேயிலை இலைகளை ஒரு சிறப்பு நொதித்தல் செயல்முறை மூலம் பாதுகாக்க முடியும் என்று தெரிந்துகொண்டனர். இதன் காரணமாக உருவான கருப்பு தேயிலை மென்மையான பச்சை தேயிலைகளை விட சுவை மற்றும் நறுமணத்தை மிகவும் நீண்ட காலம் வைத்திருந்தது. கூடவே பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நீண்டநாள்கள் வைத்திருந்து பயன்படுத்தவும் உதவியாக இருந்தது.

டீ பேக்குகள் அமெரிக்காவில் தற்செயலாக கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தப்பட்டது. 1908 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள தேயிலை வியாபாரி ஒருவர் தனது தேயிலை தயாரிப்பின் மாதிரிகளை சிறிய பைகளில் அடைத்து நகரம் முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் கஃபேக்களுக்கு அனுப்பினார். அதனுடைய முடிவுகளை தெரிந்துகொள்ள அவர் அந்த கடைகளுக்கு சென்ற பொழுது சில கடைகளில் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக பைகளில் இருந்த தேயிலையை அவர்கள் அப்படியே பையோடு சேர்த்து நீரில் போட்டு தேநீர் காய்ச்சுவதை அவர் கண்டுபிடித்தார். இப்படி டீ பேக் கண்டுபிடிக்கப்பட்டது.

Kokila

Next Post

7 வயது சிறுமியின் வாழ்வை சீரழித்த கொத்தனாரை, காவல்துறையினர் என்ன செய்தனர் தெரியுமா....?

Sat Sep 23 , 2023
பொதுவாக உத்திரபிரதேசம் என்றாலே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகம் நடைபெறும் ஒரு மாநிலமாக கருதுவார்கள். அதற்கு ஏற்றார் போல், அங்கு நடைபெறும் பல்வேறு சம்பவங்களும் இருக்கின்றன. நாள்தோறும் அந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்ற வருகிறது. இது போன்ற செயல்களை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், அந்த நடவடிக்கைகள் இந்த தவறுகளை குறைப்பதாக […]

You May Like