ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 1,996 காலி இடங்களை நிரப்பும் வகையில் கடந்த அக்.12-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இறுதி விடைக்குறிப்பு, தேர்வு முடிவுகள் மற்றும் ‘1: 1.25’ என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பாடவாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்கள் அதற்கான அழைப்புக் கடிதம் மற்றும் இதர படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவை தபால் மூலம் அனுப்பப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



