fbpx

கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3,500 செம்மறி ஆடுகள்..! ஆம் உண்மைதான்..! ஏன் தெரியுமா?

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் கூகுள். அதன் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பலரது கனவாகும். அங்கு வேலை செய்ய தவம் கிடப்பர். இந்நிலையில், தற்போது கூகுள் நிறுவனத்தில் 3,500 ஆடுகள் வேலை செய்கின்றன என்றால் நம்புவீர்களா..? ஆம் உண்மைதான்.

விஐபிக்களான இந்த ‘தொழிலாளர்கள்’ (ஆடுகள்) கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமை அலுவலகமான கூகுள் ப்ளெக்ஸில் அவ்வப்போது பணிபுரிய வருவார்கள். ஒரு வாரம் வேலை செய்துவிட்டுத் திரும்புவார்கள். மந்தையின் தினசரி வருமானம் கூகுளின் விலைக்கு சமம். ஒரு நாளைக்கு $750 வரை. அதாவது சுமார் ரூ.55000 வரை இதற்கான கட்டணம் ஆகும். கூகுளின் வளாகம் காலிபோர்னியா மௌண்டெய்ன் வ்யூவில் சுமார் 26 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. கூகுளின் அலுவலகம் 2 மில்லியன் சதுர அடி கட்டிடம். இந்த தளத்தை கூகுள் சிலிக்கான் கிராபிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து $319 மில்லியன் கொடுத்து வாங்கியது.

கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3,500 செம்மறி ஆடுகள்..! ஆம் உண்மைதான்..! ஏன் தெரியுமா?

ஜுராசிக் பூங்காவை உருவாக்கியவர்கள் சிலிக்கான் கிராபிக்ஸ். இந்த அன்பின் காரணமாக கூகுள் வளாகத்தில் இன்னும் டைனோசர் படிமத்தை வைத்திருக்கலாம். கட்டிடம் மற்றும் மைதானம் சுற்றுச்சூழலுக்கு உகந்த தென்னாப்பிரிக்க கட்டிடக் கலைஞர் கிளைவ் வில்கின்சன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தைச் சுற்றி முற்றிலும் புல்வெளிகள் அமைத்திருக்கும். இந்த புல்வெளிகளை பெட்ரோல் அல்லது டீசலால் இயக்கப்படும் இயந்திரங்கள் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஆனால், அதில் எழும் மாசு மற்றும் சத்தம் பணியாளர்களை பாதிக்கும். இயற்கைக்கும் தீங்கானது.

கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3,500 செம்மறி ஆடுகள்..! ஆம் உண்மைதான்..! ஏன் தெரியுமா?

இந்நிலையில், கூகுள் ப்ளெக்ஸில் இயற்கையாக புல் அறுக்கும் பணியாளர்களாக ஆடுகள் நியமிக்கப்பட்டுள்ளன. புல் தரைகளை சீராக பராமரிக்கும் பணிகளுக்காக 3,500 ஆடுகளை கூகுள் நிறுவனம் வாடகைக்கு வாங்கியுள்ளது. இந்த ஆடுகளை அதில் மேய வைத்து புல்தரைகளை சீராக பராமரிக்க முடிவு செய்துள்ளனர். எனினும் கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஏக்கர் புல்லை செம்மறியாடு சாப்பிட்டு சுத்தம் செய்ய 5 நாட்கள் வரை ஆகும். அதுவரை கூகுள் ப்ளக்ஸ் வளாகத்தில் ஆடு சுற்றித் திரியும். செம்மறியாடு பராமரிப்பில் பயிற்சி பெற்ற நிபுணர் ஜென், தற்போது இந்த ஆடுகளை நிர்வகிக்கிறார். இதேபோல் கடந்த 2009ஆம் ஆண்டும் 200 ஆடுகளை கூகுள் நிறுவனம் வாடகைக்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மாற்று திறனாளிப் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம்... இளைஞர் கைது...!

Sun Sep 11 , 2022
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் இருக்கும் தெத்தூர் கிராமத்தில் வசித்து வரும் மாற்று திறனாளி பெண் சுமதி (35). இவருடன் கடந்த மூன்று வருடங்களாக அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (24) என்பவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் சுமதியும், விஜயகுமாருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜயகுமார் உல்லாசம் அனுபவித்ததோடு […]

You May Like