fbpx

கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பின் மறுஆய்வு…! கருத்து தெரிவிக்க இன்றே கடைசி நாள்…!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 2023, ஆகஸ்ட் 08 அன்று “ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறைக் கட்டமைப்பின் மறுஆய்வு” குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது. கலந்தாய்வில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி முதலில் 05 செப்டம்பர் 2023 ஆகவும், மாற்றுக் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி 19 செப்டம்பர் 2023 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

அவ்வப்போது கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் காரணமாக, எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி முறையே10 அக்டோபர் 2023 மற்றும் 25 அக்டோபர் 2023 வரை நீட்டிக்கப்பட்டது .மேற்குறிப்பிட்ட ஆலோசனைப் பத்திரத்தில் மாற்றுக் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பங்குதாரர்களிடமிருந்து கோரிக்கை வந்தது.

அதன் அடிப்படையில், மாற்றுக் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 2023 நவம்பர் 1 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்கக் கோரும் எந்தக் கோரிக்கையும் ஏற்கப்படாது என்பதால் அனைவரும் கருத்துக்களை advbcs-2@trai.gov.in மற்றும் jtadvbcs-1@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் இன்றைக்கு தெரிவிக்க வேண்டும்.

Vignesh

Next Post

12 மணிநேரத்திற்கு மேல் உட்கார்ந்திருக்கிறீர்களா?… மரணம் ஏற்படும்!… ஆய்வில் எச்சரிக்கை!

Wed Nov 1 , 2023
நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்திற்கும் மேல் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 38% அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உட்கார்ந்து வேலை செய்வது உங்களுக்கு வசதியாக இருக்கலாம், ஆனால் அது உங்களை பலியாக்கிவிடும் மற்றும் நிறைய கடுமையான சுகாதார பிரச்சினைகள். இது உங்களுக்கு உடல்ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி உங்கள் மன ஆரோக்கியத்தையும் கெடுக்கும். பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், உங்கள் […]

You May Like