fbpx

உங்க ரேஷன் கார்டு தொலைந்து போச்சா…? ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது…?

தமிழ்நாட்டில் 2.08 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் அரிசி ரேஷன் கார்டுகள் உள்ளது. ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யவும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். புதிய ரேஷன் கார்டுகளுக்கும் ஏராளமானோர் விண்ணப்பம் செய்கின்றனர். தமிழ்நாடு அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டுகள் மூலமாகவே பெரும்பாலும் வழங்கப்படுகிறது. எனவே, ரேஷன் கார்டுகள் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது.

ஒருவேளை ரேஷன் கார்டு தொலைந்து போனாலும் கவலை வேண்டாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து புதிய ரேஷன் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, உங்களது ஐடி-யை பதிவு செய்ய வேண்டும். அப்போது, உங்கள் செல்போனுக்கு OTP வரும். அதை பதிவு செய்து TNPDS பக்கத்தில் நுழைந்து, அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்து சமர்ப்பித்தால், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

உங்களுக்கு விண்ணப்பிக்க தெரியவில்லை என்றால் அரசின் அனைத்து இ-சேவை மையங்களிலும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இ-சேவை அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்தால் எவ்வித சிரமும் இல்லாமல் ரேஷன் கார்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ரூ.60 வசூலிக்கப்படுகிறது. அதேபோல, தனியார் பொது சேவை மையங்களில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றார்போல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 20 நாட்களில் ஒப்புதல் கிடைத்து விடும்.

Vignesh

Next Post

41 தொழிலாளர்களை மீட்பதில் மீண்டும் பின்னடைவு!... 3வது முறையாக மீட்புப்பணி நிறுத்தம்!… இன்னும் 14 மணிநேரம் வரை ஆகலாம்?

Fri Nov 24 , 2023
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கடந்த 12ம் தேதி திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி இன்றுடன்11 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட், […]

You May Like