வாட்ஸ் அப் செயலியில் மிகவும் நெருக்கமானவர்களின் உரையாடல்களை பாதுகாக்க சேட் லாக் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் செயலியை இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் பயனர்களாக உள்ளனர். இந்த வாட்ஸ் அப் பிறருடன் தகவல்களை எளிதில் பகிர்ந்துக் கொள்ளவும், பயனர்கள் விரும்பும் பல முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது. ஆடியோ, வீடியோ காலிங் வசதி, ஸ்டேட்டஸ் அப்டேட், மெசேஜிங் வசதி, குரூப் சேட் எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.
மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளை பயனர்களின் வசதிக்கு ஏற்ப தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில் ‘லாக் சாட்’ என்னும் புதிய அம்சத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு வாட்ஸ் அப் பயனர்கள் தங்கள் தனிப்பட்ட சாட்டை archived மூலம் மறைத்து வைக்கலாம். ஆனால், அதை லாக் செய்ய முடியாது. இதன்படி இந்த புதிய ‘லாக் சாட்’ வசதியால் பிறர் பார்க்க முடியாதபடி மறைத்து வைப்பது சாத்தியமாகும் என கூறப்படுகிறது. இந்த வசதியில் கைரேகை அல்லது பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி தனிப்பட்ட சாட்களை லாக் செய்ய முடியும்.
பயனர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் செட் செய்திருக்கும் பாஸ்வேர்டு அல்லது கைரேகையை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின் பதிவு செய்யப்பட்ட பாஸ்வேர்டு குறிப்பிடப்படாமல் லாக் செய்யப்பட்ட தரவுகளை பார்க்க முடியாது. மேலும், இந்தப் புதிய வசதியான லாக் சாட் போட்டோ, வீடியோ போன்றவை கேலரியில் தானாக சேமிக்காமல் மறைத்து வைக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.