தொலைத்தொடர்பு கட்டண திருத்த ஆணை… கால அவகாசம் நீட்டிப்பு செய்த ட்ராய்…!

Central 2025

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வரைவு தொலைத்தொடர்பு கட்டண (72-வது திருத்தம்) ஆணை 2025 குறித்த ஆலோசனைகள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.


இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தெரிவித்துள்ள வரைவு தொலைத்தொடர்பு கட்டண (72-வது திருத்தம்) ஆணை 2025 மற்றும் அதன் தனிப்பட்ட கணக்கு விபர ஒழுங்குமுறை அறிக்கை (திருத்தம்) தொடர்பான வரைவு அறிக்கை தொடர்பாக கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்கு இம்மாதம் 31-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த திருத்தங்கள் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக கால அவகாசத்தை நவம்பர் 7-ம் தேதி வரை நீட்டிப்பது என ட்ராய் முடிவு செய்துள்ளது.இது தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மின்னணு வாயிலாக fa@trai.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம்.

மேலும் இந்த வரைவு அறிக்கை தொடர்பான தகவல்களை அறிய இந்தியத் தொலைத்தொடர்பு ஆணையத்தின் (நிதி மற்றும் பொருளாதார பகுப்பாய்வு) ஆலோசகர் திரு விஜயகுமாரின் +91-11- 20907773 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

“ரசிகர்களால் என் குடும்பத்துடன் நிம்மதியா வெளிய கூட போக முடியல”..!! “விஜய் மீது எந்த தப்பும் இல்ல”..!! மவுனம் கலைத்த நடிகர் அஜித்..!!

Sat Nov 1 , 2025
சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், நடிகர் அஜித் குமார் இதுகுறித்து முதல்முறையாகப் பேசியுள்ளார். கார் பந்தயப் போட்டிகளை முடித்துவிட்டு நாடு திரும்பிய அஜித், தனது பேட்டி ஒன்றில் இந்த சம்பவம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். கரூர் கூட்ட நெரிசலை வைத்து தமிழ்நாட்டில் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. ஆனால், அந்த சம்பவத்திற்கு நடிகர் விஜய் மட்டும் பொறுப்பல்ல, நாமெல்லோருமே பொறுப்புதான் என்று […]
Ajith Vijay 2025

You May Like