விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் ‘மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் நடத்தி வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மாவும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். தமிழ், மலையாளம், தெலங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டி ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்றிரவு படப்பிடிப்பு தளத்தில், லாரி சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த லாரி நிற்காமல் சென்று செட் மீது மோதியது. இதில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கு காரணம் என்றும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.