இம்ரான்கான் பேரணியில் பயங்கர துப்பாக்கிச்சூடு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடத்தப்பட்ட பேரணியில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. 

பாகிஸ்தான், வாஸிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஆளும் ஷெபாஷ் ஷெரிப் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். இந்த பேரணியில் திடீர் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.

பாகிஸ்தானில் அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். இதனை அடுத்து அரசுக்கு எதிரான போராட்டத்தை இம்ரான் கான் தீவிரப்படுத்தியுள்ளார். அப்படிதான் இன்று பேரணியும் நடப்பட்ட்டது. அப்போது திடீரென துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இம்ரான் கானுக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் தற்போது நன்றாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை இம்ரான் கான் ஆதரவாளர்கள் வளைத்துப் பிடித்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே ஆளும் கட்சி, தனது கட்சிக்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே மோதலை உருவாக்கி வருவதாக இம்ரான் கான் குற்றம் சாட்டினார்.இந்நிலையில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது தீவிரவாத கும்பலா? ராணுவமா? பாகிஸ்தான் போலீசாரா? என இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.இம்ரான் கான் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

Next Post

ராகுல்காந்தி சாட்டையால் அடித்துக்கொண்ட வீடியோ வைரல்!!

Thu Nov 3 , 2022
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஜோடோ யாத்திரையில் சாட்டையால் அடித்துக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி அவர் தனது யாத்திரையை தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என அவரது பாதயாத்திரை தொடர்கிறது. இதில் அவ்வப்போது அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலங்களும் சேர்ந்து கொள்கிறார்கள். தற்போது ராகுல் காந்தி, தெலங்கானா மாநிலத்தில் யாத்திரையை நடத்தி வருகிறார். ராகுல்காந்தி ஐதராபாத்தில் நேற்று […]

You May Like