27000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமேசான்!… இதுதான் காரணமாம்!.. CEO கொடுத்த விளக்கம்!

அமேசான் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, தனது நிறுவனத்தில் இருந்து 27,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, மிகவும் கடினமான செயல் என்று ஒப்புக்கொண்டார்.

அமேசான் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம், முதல் கட்டமாக 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததை தொடர்ந்து, இரண்டாம் கட்ட பணிநீக்கமாக, மேலும் 9000 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக கடந்த மாதம் அறிவித்தது. இந்நிலையில், இந்த ஆண்டு மட்டும் அமேசான் மொத்தமாக 27,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. தற்போது, 27,000 ஊழியர்களின் பணிநீக்கம் குறித்து அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். தனது பங்குதாரர்களுக்கு வருடாந்திர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அமேசான் நிறுவனம் அண்மைய காலத்தில் சந்தித்த கடினமான சூழ்நிலைகள் குறித்தும், செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில், 27,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வது போன்ற சில நடவடிக்கைகள் கடினமானவை என்று நிர்வாகி ஒப்புக்கொண்டார். ஆனால், இந்த முடிவு நிறுவனத்திற்கு நல்ல பலனைத் தரும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவுகளை ஒழுங்கமைக்க நிறுவனத்திற்கு உதவும் எனவும், நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து ஆழமாக ஆய்வு செய்த பிறகே இந்த பணி நீக்கம் முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Kokila

Next Post

கள்ளச்சாராயம் குடித்த 16பேர் உயிரிழப்பு!... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!... பீகாரில் சோகம்!

Sun Apr 16 , 2023
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் கள்ள மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், லக்ஷ்மிபூர், பஹர்பூர் மற்றும் ஹர்சித்தி போன்ற பல்வேறு கிராமங்களில் கள்ள சாராயம் குடித்த 16 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 48 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில் இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் கூறப்படுகிறது. இதனையடுத்து, பாட்னாவில் இருந்து மதுவிலக்கு பிரிவின் சிறப்புக் […]

You May Like