தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ள இன்றைய காலத்தில் தங்க நகைக்காக அப்பாவி உயிர்களை கொல்லும் சம்பவங்களும் அதிகரித்து விட்டது. சமீபத்தில்கூட காரைக்குடியில் ஒரு பெண்ணை, கொன்றுவிட்டு 20 சவரன் நகையை பறித்து கொண்டு சென்றுவிட்டார் அவரது கார் டிரைவர். இப்போது மற்றொரு கொடுமை திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே குடியாந்தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் மன்னார்சாமி(90). கடந்த 13ம் தேதி கோவிலுக்கு செல்வதாக வீட்டில் இருந்து கிளம்பிய அவர் திரும்பி வரவில்லை. அதன் பின்னர் கோவில் அருகே உள்ள முட்புதரில் சலமாக கிடந்தார். அதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக தூசி போலீசாருக்கு தகவல் தந்தனர்.
போலீசாரும் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்டில் மன்னார்சாமியின் நெஞ்சு பகுதியில் எலும்பு உடைக்கப்பட்டும், கழுத்து எலும்பு நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போதுதான், அதே கிராமத்தை சேர்ந்த பிரவீன்குமார் (19), தினேஷ்(21) ஆகிய 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி வந்தது தெரிய வந்தது. இரண்டு பேரையும் பிடித்து விசாரித்ததில், மன்னார்சாமியை 3 கிராம் நகைக்காக கொன்றதாக ஒப்புக் கொண்டனர். சம்பவத்தன்று கோயிலுக்கு வந்த மன்னார்சாமியை வழிமறித்து, அவரது மார்பில் எட்டி உதைத்தும், கழுத்து நெரித்தும் கொன்று விட்டு 3 கிராம் மோதிரத்தை பறித்து சென்றதாக வாக்குமூலம் தந்தனர்.. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Read more: கடன் வாங்கியவர் இறந்துவிட்டால், யார் கடனை அடைக்க வேண்டும்..? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!



